பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு இடைக்கால தடைவிதிக்கப்பட்டதன் பிரதிபலனாகவே நாட்டிற்குள் ஸ்திரமற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பு, விஜேராம மாவத்தையில் உள்ள தனது இல்லத்தில், சட்டத்தரணிகளுடன் நேற்று மாலை இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் நாட்டில் ஏற்படுத்தி பாதிப்புகளை ஏற்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகளை நிறுத்தும் நோக்கில் நான் பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டேன்.
நாடு இவ்வாறு ஸ்திரமற்ற நிலைமைக்கு சென்றமைக்கான அடிப்படையான பொறுப்பை சபாநாயகர் ஏற்கவேண்டும் எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமை, உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நடவடிக்கைகள் தொடர்பாகவும் மகிந்த ராஜபக்ச, சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.