மஹிந்தவிற்கு அச்சப்படும் தமிழ் தேசிய கூட்டமைப்பு! காரணம் என்ன?

Report Print Vethu Vethu in அரசியல்

மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் மீண்டும் அரசாங்கம் ஏற்படுவதை வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் விரும்பவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கத்தை உருவாக்க முயற்சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

நாங்கள் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைய மாட்டோம். மஹிந்த ராஜபக்ஷ மீது தமிழ் மக்கள் அச்சம் கொண்டுள்ளனர்.

மஹிந்த அரசாங்கம் ஒன்று ஏற்பட மக்கள் அச்சப்படுகின்றார்கள்.

அதனை தடுப்பதற்காகவே நாங்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு வழங்குகின்றோம்.

மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் ஒன்று உருவாகாமல் இருப்பதற்காகவே நாம் நடவடிக்கை மேற்கொள்கின்றோம்.

எனினும் சட்டவிரோதமான முறையில் அவர்கள் ஆட்சிக்குள் வந்துள்ளதாக சார்ல்ஸ் நிர்மலநாதன் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers