காலநிலையால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இலங்கைக்கு கிடைத்துள்ள இடம்

Report Print Ajith Ajith in அரசியல்

கடந்த 20 வருடக்காலப்பகுதியில் காலநிலையால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இலங்கை இரண்டாம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.

காலநிலையால் அதிகம் பாதிக்கப்பட்ட முதலாவது நாடாக ஸ்பானியாவின் "ப்யேர்டோ ரிக்கோ" பதிவிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே காலநிலை அவதான தரப்பட்டியல் வெளியிடப்பட்டபோது 2016 இல் இலங்கை நான்காவது நாடாகவும் மனித அபிவிருத்தி குறிகாட்டியில் 76ஆவது இடத்தையும் பிடித்திருந்தது.

குறிகாட்டி தரவுகளின்படி சர்வதேச ரீதியாக 1998ஆம் ஆண்டில் இருந்து 2017ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் 11ஆயிரத்து 500 மோசமான காலநிலை பதிவுகளில் 5 இலட்சத்து 26ஆயிரம் பேர் மரணமாகியுள்ளனர்.

இதன்காரணமாக 3.47 ரில்லியன் டொலர்கள் வரை நட்டம் ஏற்பட்டுள்ளன.

இலங்கையில் 2013முதல் 2017ஆம் ஆண்டில் மாத்திரம் காலநிலை தாக்கத்தினால் 200பேர் மரணமாகினர்.

12 மாவட்டங்களில் 6 இலட்சம்பேர் வரை இடம்பெயர்ந்தனர்.

Latest Offers