பிரதமர் பதவி இருக்கின்றது ஆனால் பணியாற்ற முடியாது: மகிந்த

Report Print Steephen Steephen in அரசியல்

நல்லாட்சி அரசாங்கம் தான் உட்பட குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக தொடர்ந்துள்ள வழக்குகளை எதிர்கொள்ள தயார் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

வழக்குகளுக்கு பயந்து அரசாங்கத்தை அமைத்ததாக அரசியல் எதிரணியினர் பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாகவும் அவர்கள் தான் உட்பட தமது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக வழக்குகளை ஏற்கனவே தொடர்ந்து விட்டதாகவும் மகிந்த கூறியுள்ளார்.

உயர் நீதிமன்றத்தில் தற்போது எமது தரப்பினர் வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் தீர்ப்பு கிடைக்கும். நாட்டில் பிரதமர் இருக்கின்றார். பதவி இருக்கின்றது. அமைச்சர்கள் இருக்கின்றனர். பதவிகள் இருக்கின்றன. ஆனால் பணியாற்ற தடை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாராஹென்பிட்டி அபயராம விகாரையில் முருத்தொட்டுவே ஆனந்த தேரர் தலைமையிலான துறவிகள் குரல் அமைப்பு தயார் செய்துள்ள பொதுத் தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தும் மக்கள் மகஜரை, இன்று பெற்றுக்கொண்ட போதே மகிந்த ராஜபக்ச இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

Latest Offers