இராஜதந்திரிகளை சந்தித்த ஐ.தே.முன்னணி

Report Print Steephen Steephen in அரசியல்

ஜனநாயகத்தை மதிக்கும் இலங்கையர்கள் மட்டுமல்லாது சர்வதேச சமூகம் எதிர்பார்க்கும் விதத்தில், இலங்கை அரசியலமப்புச் சட்டத்திற்கு அமைய செயற்பட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்னும் தயாரில்லை என்பதை காட்டியுள்ளதாக ஐக்கிய தேசிய முன்னணியினர், கொழும்பில் உள்ள இராஜதந்திரிகளிடம் கூறியுள்ளனர்.

நாடாளுமன்றத்தில் தமது அணியில் பெரும்பான்மை உறுப்பினர்கள் இருந்தும் ஜனாதிபதி அதற்கு இதுவரை பதிலளிக்கவில்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அலரி மாளிகையில் நடபெற்ற விசேட பேச்சுவார்த்தை ஒன்றில் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்கள் இராஜதந்திரிகளிடம் இதனை கூறியுள்ளனர்.

அரசியலமைப்புச் சட்ட ரீதியான பிரதமரை நீக்கி, ஜனநாயகத்திற்கு விரோதமாக நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் தொடர்பில் தெளிவுப்படுத்த இராஜதந்திரிகளுடனான இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் உலகின் முன்னணி நாடுகளின் இலங்கையில் உள்ள அனைத்து தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் கலந்துக்கொண்டனர்.

தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களை பிரதிநிதித்துவப்படுத்த நாடுகளின் தூதரகங்களின் சார்பில் அதன் முதன்மை செயலாளர்கள் கலந்து கொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்கள் கருத்து வெளியிட்ட பின்னர், கருத்து வெளியிட்டுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகள், இறுதியிலாவது ஜனாதிபதி சரியான தீர்மானத்தை எடுப்பார் என தமது நாடுகள் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளனர்.

Latest Offers