இலங்கை அரசியலால் வீழ்ச்சியடைந்த சுற்றுலாத்துறை

Report Print Ajith Ajith in அரசியல்

இலங்கையின் அரசியல் பிரச்சினை காரணமாக சுற்றுலாத்துறையில் வீழ்ச்சிப்போக்கு ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் இணையத்தளம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இதன்படி இலங்கைக்கு வரவிருந்த வர்த்தக மற்றும் சுற்றுலா பயணிகள் தமது பயணங்களை ரத்துச்செய்து வருகின்றனர்.

சட்டத்துக்கு புறம்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி விலக்கியமையை அடுத்து ஏற்கனவே பொருளாதாரத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் தமது ஹோட்டலுக்கு வரவிருந்த 20வீதமானோர் தமது பயணங்களை ரத்துச்செய்துள்ளதாக "கோல்பேஸ்" ஹோட்டலின் முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய பருவத்தில் தமது ஹோட்டலில் அறைகள் யாவுமே ஐரோப்பிய நாட்டு சுற்றுலாப்பயணிகளால் நிறைந்திருக்கும் எனினும் அது தற்போது குறைந்துள்ளது.

பல விமானங்களின் பயணங்களும் ரத்துச்செய்யப்பட்டுள்ளன. இந்தநிலையில் அரசியல் பிரச்சினை தொடர்ந்தும் தீர்க்கப்படாதுபோனால் ஐரோப்பாவில் இருந்து மாத்திரமல்ல.

ஏனைய இடங்களில் இருந்தும் சுற்றுலாப்பயணிகளின் பயணங்கள் ரத்து செய்யப்படும் என்று ஹோட்டல்களின் முகாமைகள் தெரிவித்துள்ளன.

Latest Offers