உலக பாசிச சர்வாதிகாரிகளாக மாறிய மைத்திரி மகிந்த

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

பாசிசம் மற்றும் நாசிய கொள்கையினை கொண்ட ஹிட்லர், முசோலினி போன்று மைத்திரி மகிந்த கூட்டணி செயற்பட்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண,

நாட்டில் இன்று அரசாங்கமோ, அமைச்சரவையோ கிடையாது. தற்போது நாடு எவ்வகையான நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றது என்பதை ஜனாதிபதி ஒருபோதும் அறியமாட்டார்.

எனவே மக்களாணையினை மதிப்பவராயின் மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்களை இவர் ஏற்க வேண்டும்.

பாசிசம் மற்றும் நாசிய கொள்கையினை கொண்ட ஹிட்லர், முசோலினி ஆகியோர் ஆரம்பத்தில் ஜனநாயக ரீதியாகவே தலைவர்களாக தெரிவு செய்யப்பட்டார்கள்.

பின்னர் அதிகார பேராசையில் நாடாளுமன்றத்திற்கும், நீதித்துறைக்கும் எதிராக செயற்பட்டு உலக மகா யுத்தத்தினை தோற்றுவித்தனர்.

இந்த சூழ்நிலைகளையே தற்போது மைத்திரி- மஹிந்த கூட்டணி பின்பற்றி வருகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers