19வது திருத்தச் சட்டத்தில் சிக்கல்கள் இருந்தால் அவற்றை திருத்த தயார்- ஜனாதிபதி

Report Print Steephen Steephen in அரசியல்

19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் சிக்கல்கள் இருந்தால் அதனை திருத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தயாராக இருப்பதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் நோக்கத்தை பாதுகாக்கும் வகையில் அந்த திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் சில விடயங்கள் பலவீனமாக இருந்தால், அந்த திருத்தச் சட்டத்தின் நோக்கம், அதன் மூலம் ஏற்படுத்தப்பட்ட ஜனநாயகத்தை பாதுகாத்து, அதனை போஷித்து, அரசியல் ரீதியாக சிக்கலான விடயங்களை திருத்தங்களை, நாடாளுமன்றத்தின் செயற்பாடுகளுக்கு அமைய மேற்கொள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அர்ப்பணிப்புடன் இருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers