ரணிலுடன் தனிப்பட்ட உறவு கிடையாது: ரிசாத் பதியுதீன்

Report Print Ajith Ajith in அரசியல்

தமது கட்சியை பொறுத்தவரையில் ரணில் விக்கிரமசிங்கவை பிரசித்தப்படுத்தும் நிலைப்பாட்டை கொண்டிருக்கவில்லை என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

காங்கிரஷின் தலைவர் ரிசாத் பதியுதீன் கொழும்பில் செய்தியாளர்களை இன்று சந்தித்தபோதே இதனை குறிப்பிட்டார்.

தமது கட்சியை பொறுத்தவரை, ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் பாதுகாப்பதற்காக ஐக்கிய தேசிய முன்னணியை ஆதரிக்கிறது.

ரணில் விக்கிரமசிங்கவுடன் தனிப்பட்ட உறவோ அக்கறையோ தமது கட்சிக்கு இல்லை. எனினும் சட்டவிரோதமாக அகற்றப்பட்ட ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட வேண்டும் என்பதை தமது கட்சி வலியுறுத்துவதாக அவர் தெரிவித்தார்.

Latest Offers