உயர்நீதிமன்ற நீதியரசர் பதவியில் இரண்டு வெற்றிடங்கள்!

Report Print Ajith Ajith in அரசியல்

தமது அரசாங்கத்துக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால தடையுத்தரவை விசாரணை செய்ய உயர்நீதிமன்றத்தில் நீதியரசர்களுக்கு வெற்றிடங்கள் உள்ளதாக இரண்டு நாட்களுக்கு முன்னாள் பிரதமர் பதவியில் இருந்து தடுக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக தமது அரசாங்கத்துக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடையை நீக்கக்கோரிய வழக்கை உடனடியாக விசாரணை செய்யமுடியாமல் போயுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீதியரசரான ஈவா வணசுந்தர அடுத்த வருட ஆரம்பத்தில் பதவியில் இருந்து இளைப்பாறவுள்ள நிலையில் புதிய வழக்கு விசாரணைகளை பாரமேற்பதில்லை. நாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள வழக்கை விசாரணை செய்வதற்காக ஏற்கனவே ஏழு நீதியரசர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எனவே அவர்களால் தமது வழக்கு விசாரணையில் பங்கேற்க முடியாது. உயர்நீதிமன்ற நீதியரசர் பதவியில் இரண்டு வெற்றிடங்கள் உள்ளன.

உயர் நீதியரசர்களாக பதவியேற்க ஏற்கனவே எஸ் துரைராஜா மற்றும் காமினி அமரசேகர ஆகியோரை அரசியல் அமைப்பு சபை பரிந்துரை செய்துள்ளபோதிலும் அவர்கள் இன்னும் நியமனம் பெறவில்லை.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இருந்து இரண்டு நீதியரசர்கள் உயர்நீதிமன்றத்துக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள போதிலும் அதுவும் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.

இந்த நிலையில் உயர்நீதிமன்றத்தில் ஏற்பட்டுள்ள மனித மூலதன பிரச்சினையால் கடைசியாக பாதிக்கப்பட்டுள்ளவராக மஹிந்த ராஜபக்ச பதியப்பட்டுள்ளார்.

Latest Offers