என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் மைத்திரி தான் பொறுப்பு! நாடாளுமன்ற உறுப்பினர் முறைப்பாடு

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதன் பொறுப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

நாமல் குமார வெளியிட்ட குரல் பதிவு ஒன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியூதினை கொலை செய்யும் திட்டம் குறித்த ஒலிப்பதிவு இருந்துள்ளது. அப்பதிவு தொடர்பான முறைப்பாடு பொலிஸ் தலைமையகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர்,

என்னை கொலை செய்யும் திட்டம் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ள நிலையிலும் எனக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது.

தற்போது பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதியே இருக்கிறார். எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அவரே பொறுப்பேற்க வேண்டும் என்று ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.