அச்சம் கொள்ள வேண்டாம்! எந்தச் சிக்கலும் வராது: நாடாளுமன்ற உறுப்பினர் நம்பிக்கை

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலைமை காணப்படுவதாக கூறப்படும் போலியான கருத்துக்கள் தொடர்பில் அச்சம் கொள்ள வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடி காரணமாக அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளதாக நாடாளுன்றத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இது அரச ஊழியர்களுக்கு அச்சம் ஏற்படும் செய்தியாக அமைந்திருந்தது. இந்நிலையில் இது தொடர்பாக கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தனவிடம் கேள்வி ஏழுப்பட்டது.

இதற்குப் பதிலளித்துப் பேசிய பந்துல, அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலைமை காணப்படுவதாக கூறப்படும் போலியான கருத்துக்கள் தொடர்பில் அச்சம் கொள்ள வேண்டாம். அப்படியான எந்தவொரு சூழ்நிலையும் ஏற்படாது என்று குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers