நாட்டில் ஏற்பட்டிருக்கும் சிக்கலான பிரச்சினையை தீர்ப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டியது அவசியமான ஒன்று என்று அரசியல் தலைவர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த மாதம் 26ம் திகதி பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவை நீக்கிவிட்டு அந்த இடத்திற்கு மகிந்த ராஜபக்சவை நியமித்திருந்தார். இதனால் நாட்டில் அரசியல் குழப்பம் ஏற்பட்டது.
இந்நிலையில் பிரச்சினைகளை கையாண்டு தீர்த்துக் கொள்ளாமல் மேலும் மேலும் சிக்கல் நிலை நீடித்துக் கொண்டிருக்கிறது. இது தொடர்பில் பௌத்த மதகுருக்களும், சமூக ஆர்வலர்களும் அரசியல் தலைவர்கள் ஒன்றிணைந்து செயலாற்றுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி,
ஜனாதிபதிக்கு ஏற்ற விதமான பிரதமர் ஒருவர் நியமிக்கப்படவில்லை எனின் நாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்ல முடியாது. ஜனாதிபதிக்கு ஏற்ற விதமான பிரதமர் ஒருவரை முன்வைப்பது நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடமை என்றார்.