ரணிலுக்கு ஏற்பட்டுள்ள நிலை! ஐக்கிய தேசியக் கட்சியினரே வெறுக்கின்றனர்

Report Print Murali Murali in அரசியல்

ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் பதவியை வழங்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களுக்கு விருப்பம் இல்லையென நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண நாங்கள் எப்போதும் தயாராகவே இருக்கின்றோம்.

எனினும், ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் தேர்தலை கண்டு அஞ்சுகின்றன.

இதன் காரணமாகவே இடைக்கால அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர். பிரதமர் பதவி தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சிக்குள் தற்போது பாரிய கருத்து முரண்பாடுகள் காணப்படுகின்றன.

ரணிலை பிரதமராக்க கூடாது என ஒரு தரப்பினர் கூறிவருகின்றனர். அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவாக செயற்படும் கட்சிகளும் ரணில் பிரதமராவதை விரும்பவில்லை” என அவர் மேலும் கூறியுள்ளார்.

Latest Offers