வரலாற்றில் ஏற்பட்ட மிக மோசமான நிலை! ஜனாதிபதி தொடர்பில் நம்பிக்கை வெளியிட்டுள்ள ஐ.தே.க

Report Print Murali Murali in அரசியல்

நாட்டில் தற்போது மிகவும் மோசமான நிலையேற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கொழும்பு - மேல் நீதிமன்ற வளாகத்தில் வைத்து இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“வரலாற்றில் ஏற்பட்ட மிக மோசமான நிலை இதுவாகும். நாட்டில் தற்போது அனைத்து விடயங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கோடிக்கணக்கான முதலீடுகளை நாம் இழந்துள்ளோம்.

அரசியல் குரோதம் காரணமாக இரண்டு கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகையினால் ஒக்டோபர் 26ஆம் திகதிக்கு முன்னர் காணப்பட்ட நிலைமையை ஜனாதிபதி மிக விரைவில் ஏற்படுத்த வேண்டும்.

நாட்டில் சட்ட ரீதியான பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியில் அரசாங்கம் செயற்படுவதற்கு ஜனாதிபதி வழியேற்படுத்த வேண்டும்” என அவர் மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை, இந்த சந்தரப்பத்தில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க,

“ஜனாதிபதி மீது எமக்கு இன்னும் நம்பிக்கை இருக்கின்றது. சரியான நேரத்தில் நாம் அதனை காண்பிப்போம். இது குறித்து நாம் ஆராய்ந்து அடுத்த வாரமாகும் போது சிறந்த முறையில் செயற்படுவோம்.

அதன் போது யாருக்கு என்ன நடந்தது என்பதை பார்க்க முடியும்” என அவர் மேலும் கூறியுள்ளார்.

Latest Offers