நாடாளுமன்றில் உரிய நேரத்தில் பெரும்பான்மையை நிரூபித்து காட்டுவோம்! மகிந்த நம்பிக்கை

Report Print Murali Murali in அரசியல்

அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்களை முன்னெடுத்து செல்கின்றோம். ஜனாதிபதியும், செயலாளர்களும் உள்ளனர். அதற்கு அமைய செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றதென நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பொது தேர்தலை கோரி 50 லட்சம் கையெழுத்துகளை சேகரிக்கும் திட்டத்தின் கீழ் திரட்டப்பட்ட கையொப்பங்கள் அடங்கிய மகஜர் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்சவிடம் இன்று கையளிக்கப்பட்டது.

இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலையை முடிவுக்கு கொண்டு வரவேண்டுமாக இருந்தால் பொது தேர்தலை நடத்த வேண்டும். தேர்தல் நடத்தப்படும் என மக்கள் நம்புகின்றனர்.

தனிப்பட்ட ரீதியில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. இந்த நாட்டை ஸ்தீரப்படுத்துவதற்கு தேர்தல் நடத்தப்பட வேண்டியது அவசியமாக இருக்கின்றது.

எவ்வாறாயினும் தேர்தல் என்று கூறியதும் ஐக்கிய தேசியக் கட்சியினரின் கால்கள் நடுங்குகின்றன. ஐக்கிய தேசியக் கட்சி என்மீது குற்றம் சுமத்தவில்லை.

எமக்கு எதிராக அவதூறு ஏற்படுத்துகின்றனர். எவ்வாறாயினும், நாடாளுமன்றில் உரிய நேரத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers