அரசியல் நெருக்கடிக்கு இதுவே சிறந்த தீர்வு! மகிந்தவின் சகோதரர்

Report Print Murali Murali in அரசியல்

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகளுக்கு ஒரே சிறந்த தீர்வு பொது தேர்தலை நடத்துவதே என நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற வளாகத்தில் வைத்து ஊடகங்களுக்கு இன்று கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை கூறியுள்ளார்.

“மக்களின் உரிமையை மக்களுக்கு பெற்றுக்கொடுக்கவே நாம் முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமையில் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும்.

இதனை அனைவரும் நன்கு உணர்ந்துள்ளார்கள். அத்துடன், கடந்த மூன்று ஆண்டுகளாக நாட்டில் இடம்பெற்றதையும் மக்கள் நன்கு அறிவார்கள்.

பொருளாதாரப் பாதிப்பு, தேர்தல்களை பிற்போட்டமை என அனைத்துச் செயற்பாடுகளும் ஜனநாயகத்தக்கு முரணாகவே இடம்பெற்றது. எனவே, பொதுத் தேர்தல் ஒன்று அவசியம்” என அவர் மேலும் கூறியுள்ளார்.

Latest Offers