அரசியல் பரபரப்புக்கு மத்தியில் மைத்திரி தலைமையில் கூடுகின்றது சுந்திரகட்சியின் மத்திய குழு?

Report Print Murali Murali in அரசியல்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவின் விசேட கூட்டம் இன்று இரவு 7 மணிக்கு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், ஜனாதிபதியின் உத்தியோக பூர்வ இல்லத்தில் இக்கூட்டம் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தக் கூட்டத்தில் கட்சியின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிரான மனு மீதான தீர்ப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனால், கொழும்பு அரசியல் சூடு பிடித்துள்ளது. நீதிமன்ற தீர்ப்பின் பின்னர், முன்னெடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைள் குறித்து அரசியல் கட்சிகள் தீவிர கவனம் செலுத்தியுள்ளன.

இவ்வாறான பின்னணியில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவின் விசேட கூட்டம் இன்று இரவு 7 மணிக்கு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers