பொறிக்குள் சிக்க வைத்த மஹிந்த கும்பல்! கடுமையாக திட்டிய மைத்திரி

Report Print Vethu Vethu in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நெருக்குடிக்குள் சிக்க வைக்கும் செயற்பாட்டில் மஹிந்த தரப்பினர் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதனால் கடும் கோபம் அடைந்துள்ள ஜனாதிபதி, மஹிந்தவின் சகாக்களை கடுமையாக திட்டியதாக ஜனாதிபதி செயலக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன வெளியிட்ட கருத்து தொடர்பில் ஜனாதிபதி கடுமையாக திட்டியுள்ளார்.

ஆட்சிக்கு வந்தவுடன் 19ஆம் திருத்தச்சட்டத்தை மாற்றுவோம் என அபேவர்த்தன தெரிவித்திருந்தார்.

இந்தக் கருத்து தொடர்பில் ஜனாதிபதி கடும் ஆத்திரமடைந்த நிலையில் அவரை திட்டியுள்ளார்.

தொலைபேசி ஊடாக லக்ஷ்மன் யாப்பாவை தொடர்பு கொண்ட ஜனாதிபதி, கடுமையாக திட்டியுள்ளார்.

19ஆம் திருத்தச்சட்டத்தில் பலவீனங்கள் உள்ள போதிலும் அது ஏற்றுக்கொள்ளப்பட்ட முக்கியமான சட்டமாகும் என ஜனாதிபதி, அவருக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

முரண்பாடாக கருத்துக்களை வெளியிட்டு சிக்கல்களை ஏற்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரினால் 19வது திருத்த சட்டத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers