ஜேர்மனியிலும் இவ்வாறான நெருக்கடியா? பொய் சொல்லி மாட்டிக் கொண்ட மைத்திரி

Report Print Vethu Vethu in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள கருத்து தொடர்பில் இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் தனது கவலை வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமை போன்று ஐரோப்பிய நாடுகளான ஜேர்மனி, இத்தாலியிலும் ஏற்பட்டதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

ஜேர்மனில் 6 மாத காலங்கள் அரசாங்கம் ஒன்று இல்லாமல் ஜேர்மன் அதிபர் நாட்டை நடத்தி சென்றார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார்.

அரசியல் லாபங்களுக்காக இவ்வாறான போலித் தகவல்களை வெளியிட வேண்டாம் என ஜனாதிபதியிடம், இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் கேட்டுள்ளார்.

அண்மையில் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, “சில நெருக்கடிகள் காரணமாக அரசாங்கம் ஒன்று இல்லாத சந்தர்ப்பங்கள் தொடர்பில் உலகில் பல நாடுகள் உதாரணமாக உள்ளது.

இந்த வருடத்தின் ஆரம்பத்தில் ஜேர்மன் அதிபர் ஏஞ்சலோ மெர்கல் அவ்வாறான சிக்கலுக்கு முகம் கொடுத்தார். அவர் புதிய அரசாங்கத்திற்கு அவசியமான பெரும்பான்மை ஏற்படுத்துவதற்கு 6 மாதங்களுக்கு அதிக தேவைப்பட்டது என ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.

எனினும் இந்த கருத்து தொடர்பில் கருத்து வெளியிட்ட ஜேர்மன் தூதுவர், சரியான கருத்துக்கள் தெரியாமல் தனது இலாபத்திற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார். புதிய தேர்தலுக்கு பின்னர் ஜேர்மனில் ஏற்பட்ட நிலைமை மற்றும் இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியலமைப்பு நெருக்கடி ஒரு போதும் சமமான விடயமல்ல. ஜேர்மனில் ஏற்பட்ட நிலைமையை உதாரணமாக கொண்டு ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெற்ற அரசியலமைப்பு நெருக்கடியை நியாயப்படுத்த முடியாது என அவர் கூறியுள்ளார்.

தனது தேவைக்காக ஜேர்மன் நாட்டை இழுத்து செய்திகளை திரிபுபடுத்திக் கூற வேண்டாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜேர்மன் தூதுவர் இது தொடர்பில் இராஜதந்திரிகள் சிலருடன் கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளார்.

இந்த நிலையில் இது தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல் மேற்கொள்வதற்கு சந்தர்ப்பம் ஒன்றை வழங்குமாறு ஜேர்மன் தூதுவர் கோரிக்கை விடுத்த போதிலும் அவருக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என கூறப்படுகின்றது.

Latest Offers