உயர் நீதிமன்றை சுற்றிவளைத்துள்ள அதிரடிப்படையினர்

Report Print Jeslin Jeslin in அரசியல்

உயர் நீதிமன்ற வளாகத்தின் பாதுகாப்புக்கு, இன்றைய தினமும், விசேட பொலிஸ் அதிரடிப்படையினரால் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களாகவே, நீதிமன்ற வளாகத்துக்கு, அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்த நிலையில், இன்றைய தினமும் அவ்வாறு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் கலைக்கப்பட்டமைக்கு எதிராகவும் ஆதரவாகவும் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை மனித உரிமை மீறல் மனுக்கள் தொடர்பான விசாரணைகள், நான்காவது நாளாக இன்றும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள நிலையிலேயே, இந்தப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

பிரதமர நீதியரசர் நலின் பெரேரா தலைமையிலான எழுவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில், இந்த மனுக்கள் மீதான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Latest Offers