19ஆவது திருத்தச் சட்டத்தை திருத்த இடமளிக்க போவதில்லை

Report Print Steephen Steephen in அரசியல்

19ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை மீண்டும் பின்நோக்கி கொண்டு செல்ல இடமளிக்க போவதில்லை எனவும் நாட்டுப் பிரஜைகளின் உரிமைகளுக்காக குரல் கொடுக்க போவதாகவும் ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

ஜனநாயகத்தை பின்நோக்கி திருப்ப முயற்சிக்கும் துஷ்ட சக்திகளே 19ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை திருத்த இணைந்துள்ளன.

ஐக்கிய தேசிய முன்னணி என்ற வகையில் நாங்கள் 19ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை திருத்த அனுமதிக்க மாட்டோம். நாட்டுப் பிரஜைகளின் உரிமைகளுக்காக குரல் கொடுப்போம்.

பிரஜைகளை பலவீனப்படுத்தி, அரசியல்வாதிகளை பலப்படுத்தும் எந்த செயலாக இருந்தாலும் அதற்கு எதிராக செயற்படுவோம் எனவும் அஜித் பீ. பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers