19ஆவது திருத்தம் சம்பந்தமாக ஜனாதிபதி பொறுப்புக் கூறவேண்டும் - ஜோன்

Report Print Steephen Steephen in அரசியல்

19ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் சம்பந்தமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஒரு விதத்தில் பொறுப்புக் கூற வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவை தவிர ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் 19ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற அன்று காணப்பட்ட சந்தர்ப்பத்திற்கு அமைய வாக்களித்தனர். தற்போது தான் அதில் உள்ள தவறுகள் எமக்கு தெரிகின்றன.

எமது தரப்பினர் ஸ்திரமான அரசாங்கத்தை அமைத்த பின்னர், 19ஆவது அரசியலமைப்புச் சட்டத்தை இரத்துச் செய்வோம் அல்லது திருத்துவோம். 19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தில் உள்ள ஆழமான விடயங்கள் ஜனாதிபதிக்கு தெரிந்திருக்கும் என நான் நினைக்கவில்லை எனவும் ஜோன் செனவிரட்ன குறிப்பிட்டுள்ளார்.

எது எப்படி இருந்த போதிலும் தனது தலைமையிலும் அபிப்பிராயத்திலும் தைரியத்திலும் 19ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று வெளியிட்டிருந்த ஊடக அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

Latest Offers