இரணைமடுவில் பொலிஸாருக்கும் முப்படையினருக்கும் மைத்திரி தெரிவிக்கும் நன்றி

Report Print Yathu in அரசியல்

பாரிய யுத்தம் ஒன்றை நிறைவுக்கு கொண்டு வந்த இச் சூழலில் இந்தப்பிரதேச விவசாயிகள், இரணைமடு குளத்தினை பயன்படுத்தகூடிய நல்ல சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இரணைமடுக் குளத்தினை விவசாயிகளிடம் கையளிக்கும் நிகழ்வில்கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

கிளிநொச்சி இரணைமடு குளம் பாரிய அபிவிருத்தியின் பின்னர் இன்று விவசாயிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

2198 மில்லியன் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் இக்குளம் புனரமைக்கப்பட்டுள்ளது.

முதலில் 131 ஏக்கர் கன மீற்றர் நீர் கொள்வனவாக காணப்பட்ட நிலையில், இந்த அபிவிருத்தியின் பின்னர் 148 மீற்றர் கன அடி கொள்ளவு நீரைத் தேக்க கூடியதாகவுள்ளது.

உத்தியோகத்தர்கள் வளமான பொறியியலாளர்கள் என பல்வேறு பங்களிப்புடன் குறித்தகுளத்தின் அபிவிருத்தி பணி நிறைவு செய்யப்பட்டுள்ளது.

1985ஆம் ஆண்டுக்கு பின்னர் இம்முறை பாரிய அபிவிருத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2012ஆம் ஆண்டு அபிவிருத்தி பணிகள் ஆரம்பிக்கப்பட்டு தற்போது முடிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த அபிவிருத்தியின் மூலம் விவசாயிகள் மேலும் பல ஏக்கர் செய்கை மேற்கொள்ள முடியும்.

இது கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளிற்கு மாத்திரம் அல்லாது வடக்கு மாகாண மக்களிற்கும் பெரும் ஆசீர்வாதமாக அமையும் என்பதையிட்டு மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன். இவ்வாறானதொரு நிகழ்வில் நான் கலந்து கொள்வதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன்.

கடந்த பத்து வருடங்களிற்கு முன் இப்பிரதேசத்தில் பாரிய யுத்தம் காரணமாக பல்வேறு துபன்பகரமான சம்பவங்கள் இடம்பெற்றன.

இச்சந்தர்ப்பத்தில் முப்படையினர், பொலிசார் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகின்றேன். ஏனென்றால் பாரிய யுத்தம் ஒன்றை நிறைவுக்கு கொண்டு வந்தமைக்கு.

இன்று நல்ல சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில் இன்று விவசாயிகள் இவற்றை பயன்படுத்தகூடிய சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers