ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Report Print Steephen Steephen in அரசியல்

நீதிமன்றத்தை அவமதித்தார் என்ற குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக தொடர்ப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் பெப்ரவரி 26 ஆம் திகதிக்கு உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

நீதியரசர்கள் ஈவா வனசுந்தர மற்றும் எல்.டி.பி தெஹிதெனிய ஆகியோர் முன்னிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது. பிரதிவாதியான ரஞ்சன் ராமநாயக்க, நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்க சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தாபா ஆஜராகியிருந்தார். இந்த முறைப்பாடு தொடர்பில் உயர்நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பாணை தமது தரப்புவாதிக்கு கிடைக்கவில்லை எனவும் எனினும் அவர் இன்றயை தினம் நீதிமன்றத்தில் ஆஜராகியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வழக்கிற்கு ஏதுவாக அமைந்த பிரதிவாதியின் பிரச்சினைக்குரிய கருத்து அடங்கியிருப்பதாக கூறப்படும் சீடியும் தமக்கு கிடைக்கவில்லை எனவும் சீடியின் பிரதி ஒன்றை பிரதிவாதி தரப்புக்கு வழங்குமாறும் சட்டத்தரணி கேட்டுக்கொண்டுள்ளார்.

இதன்போது சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சஞ்ஜய ராஜரத்தினம்? பிரதிவாதியின் கருத்து நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் இருந்தால், அது சம்பந்தமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சட்டமா அதிபர் அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுப்பார் எனக் கூறினார்.

இதனையடுத்து வழக்கு விசாரணைகளை எதிர்வரும் பெப்ரவரி 26 ஆம் திகதிக்கு நீதியரசர்கள் ஒத்திவைத்துள்ளனர்.

Latest Offers