உச்ச நீதிமன்றின் தீர்ப்பை ஏற்றுக் கொள்ளத் தயார்! மஹிந்த தரப்பு அறிவிப்பு

Report Print Vethu Vethu in அரசியல்

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக உயர் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை ஏற்றுக் கொள்ளவதாக மஹிந்த தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதியினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை நான்காவது நாளாகவும் இன்று நடைபெற்றது.

இதன்போது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவை மேலும் இரு நாட்களுக்கு நீடிப்பதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் நீதிமன்ற செயற்பாடுகளை பார்வையிட சென்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்ணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பந்துல குணவர்த்தன, விஜயதாஸ ராஜபக்ஷ ஆகியோர் கருத்து வெளியிட்டுள்ளனர்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏதுவாக இருந்தாலும் அதனை மதித்து ஏற்றுக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளனர்.

தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு நீதிமன்றத்தின் தீர்ப்பே தீர்வு காணும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Latest Offers