மைத்திரியின் முடிவினால் புறக்கணிக்கப்படும் இலங்கை!

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிகழ்த்தியிருந்த அரசியல் மாற்றத்தினால் ஏற்பட்டிருக்கும் குழப்பங்களையடுத்து இலங்கை சுற்றுலாத்துறை பெரும் வீழ்ச்சியை சந்தித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையின் சுற்றுலாத்துறையில் ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சி தொடர்பில் செய்தி வெளியிட்டிருக்கும் ரொய்ட்டர்ஸ், இந்த வீழ்ச்சி முன்பு எப்பொழுதும் இல்லாததை விட சரிவடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

அண்மையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்பங்களுக்குப் பின்னர், 20 வீதமான அறை முன்பதிவுகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன என்று கொழும்பில் 200 அறைகளைக் கொண்ட, கோல் பேஸ் விடுதியின் முகாமையாளர் சந்திர மகோற்றி தெரிவித்துள்ளார்.

வழக்கமாக எமது விடுதி நிரம்பியிருக்கும். முன்பதிவு ஒதுக்கீடு பயன்படுத்தப்படாது என்ற அச்சத்தினால் நாங்கள் தள்ளுபடிகளை வழங்குகிறோம் என்று அவர் கவலை தெரிவித்திருக்கிறார். இதேவேளை, பல்வேறு விமானங்களின் முன்பதிவுகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக, ஐரோப்பாவில் இருந்து வரும் சுற்றுலா பயணங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன” என்று விமானசேவை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுவொருபுறமிருக்க, இவ்வரசியல் குழப்பங்களை அடுத்து, இங்கு நடத்தவிருந்த கூட்டங்கள், நிகழ்வுகளை பல்வேறு நிறுவனங்களும் தென்கிழக்காசியாவுக்கு நகர்த்த ஆரம்பித்துள்ளதாகவும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் ஏற்பட்டிருக்கும் இக்குழப்பம் நாளுக்கு நாள் சிக்கலாகிக் கொண்டிருக்கிறது, இதனால் பொருளாதாரத்தில் சரிவு ஏற்பட்டிருக்கிறது. சுற்றுலாப் பயணிகளின் வீழ்ச்சியும், அந்நிய முதலீடுகளில் தனியார் நிறுவனங்கள் தமது நிலைப்பாட்டை மாற்றும் அளவிற்கும் இப்பொழுது இலங்கையின் அரசியல் நிலைமை அமைந்திருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த 2015ம் ஆண்டிற்குப் பின்னர், இலங்கை மீதிருந்த அழுத்தங்களை சர்வதேசம் குறைத்ததோடு, முதலீடுகளை பெருக்குவதற்கும், யுத்த இழப்புக்களில் இருந்து மீண்டுவருவதற்கும் அரசாங்கத்திற்கு கை கொடுத்துதவியது. ஆனால் மூன்றாண்டுகள் முழுமையாக முடிவடைவதற்குள் அந்த நிலைப்பாடு தலைகீழாக மாறியிருப்பதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஜனாதிபதியின் இந்த நடவடிக்கையால் சர்வதேச ரீதியில் இலங்கை புறக்கணிக்கப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Latest Offers