அலரி மாளிகையில் நடைபெற்ற நிகழ்விற்கு பொதுஜன பெரமுன கண்டனம்

Report Print Ajith Ajith in அரசியல்

அலரி மாளிகையில் வைத்து கடந்த புதன்கிழமை ரணில் விக்கிரமசிங்க, வெளிநாட்டு ராஜதந்திரிகளை சந்தித்த நிகழ்வை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கண்டித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க இந்தக்குற்றச்சாட்டை இன்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றின்போது சுமத்தியுள்ளார்.

இந்தநிலையில் வெளிநாட்டு ராஜதந்திரிகளின் களிப்பாட்டங்களுக்கு அலரிமாளிகையின் பொது சொத்துக்கள் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரதமமந்திரியின் உத்தியோகபூர்வ இல்லமான அலரிமாளிகையில், பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க எவ்வாறு தொடர்ந்து தங்கியிருக்க முடியும் என்று சேமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்கப்போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால தெரிவித்துள்ள நிலையில் மற்றும் ஒருவரை பிரதமராக பரிந்துரைப்பது தொடர்பில் ஐக்கிய தேசியக்கட்சிக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

Latest Offers