அரசியல் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண ஒரே வழி

Report Print Ajith Ajith in அரசியல்

நடைமுறையில் ஏற்பட்டுள்ள அரசியலமைப்பு மற்றும் அரசியல் பிரச்சினைக்கு தீர்வைக்காண ஜனாதிபதி தேர்தலையும் பொதுத்தேர்தலையும் ஒருங்கே ஒரே நாளில் விரைவில் நடத்தவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல் அமைப்பான "கபே" இந்தக்கோரிக்கையை விடுத்துள்ளது.

கபேயின் நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் இந்தக்கோரிக்கையை விடுத்துள்ளார்.

எதிர்வரும் ஜனவரி 8ஆம் திகதியன்று நான்கு வருடங்கள் நிறைவடையும் நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி தேர்தலை நடத்தும் அதிகாரத்தை கொண்டிருக்கிறார்.

இந்தநிலையில் ஜனாதிபதி தேர்தலும் பொதுத்தேர்தலும் ஜனவரியில் நடத்தப்படுமானால், பெப்ரவரியில் புதிய ஜனாதிபதி, புதிய அரசாங்கம், புதிய நாடாளுமன்றம், என்ற அடிப்படையில் புதிய நம்பிக்கையை கொள்ளமுடியும்.

தற்போதைய பிரச்சினையை உருவாக்கியர் என்ற அடிப்படையில் ஜனாதிபதியே , இந்த ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராக முடியும் என்று கபேயின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் வலியுறுத்தியுள்ளார்.

Latest Offers