வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பிற்காக காத்திருக்கிறேன்: சஜித்

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

வரலாற்று முக்கியத்துவம் மிக்க தீர்ப்புக்காக நாட்டு மக்களுடன் நானும் காத்திருக்கின்றேன் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைத்தது அரசியலமைப்புக்கு முரணானது என்று கூறி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. குறித்த வழக்கு இன்றும் நீதிமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போது நீதிமன்றத்திற்கு வெளியே இருந்த செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

நீதிமன்ற தீர்ப்பு குறித்து எனக்கு எதிர்வு கூற முடியாது. நீதிமன்ற தீர்ப்பு குறித்து எமக்கு அச்சமில்லை. எவ்வகையான தீர்ப்பானாலும் அதனை ஏற்றுக்கொண்டு தொடர்ந்தும் மக்களுக்கு பணியாற்ற நாம் தயாராக இருக்கிறோம்.

சிலர் தமக்கு எதிரான தீர்ப்பு வந்துவிடுமோ என்ற அச்சத்தினால் குழறுபடிகளில் ஈடுபடுவதை காணமுடிகின்றது. இவ்வாறான கலகக்காரர்கள் ஐ.தே.க.வில் இல்லை.

நீதிமன்ற வளாகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதை அவதானித்தேன். இப்பாதுகாப்பு இன்று மட்டுமல்ல 365 நாட்களும் பாராளுமன்றம் நீதிமன்றம் ஏன் நாட்டு மக்களுக்கும் வழங்கப்பட வேண்டிய ஒன்று. வரலாற்று முக்கியத்துவம் மிக்க தீர்ப்புக்காக நாட்டு மக்களுடன் நானும் காத்திருக்கின்றேன் என்றார்.

Latest Offers