சமுர்த்தி அலுவலர்களிற்கு வவுனியாவில் செயலமர்வு

Report Print Theesan in அரசியல்

வன்னி மாவட்டம் மற்றும், கிளிநொச்சியை சேர்ந்த சமுர்த்தி அலுவலர்களிற்கான செயலமர்வும், பயிற்சியும் வவுனியா பிரதேச செயலகத்தில் இன்று காலை நடைபெற்றது.

சமுர்த்தி திணைக்களம் மற்றும் சமுர்த்தி வங்கிகளின் மூலம் மக்களிற்கு பயன்படக்கூடிய செயற்திட்டங்களை மேலும் விஸ்தரித்து அவற்றில் வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கோடு குறித்த செயலமர்வு நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் வளவாளராக சமுர்த்தி தலைமைபீடத்தில் இருந்து வருகை தந்திருந்த அரியநாதன் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சமுர்த்தி திணைக்களத்தின் வவுனியா மாவட்ட பணிப்பாளர் பத்மரஞ்சன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்டஅரச அதிபர் எம்.கனீபா, பிரதேச செயலாளர் கா.உதயராசா, சமுர்த்தி தலைமைபீட முகாமையாளர் ச.சந்திரகுமார் என பலரும் கலந்துகொண்டனர்.

Latest Offers