சஜித் மீது மைத்திரிக்கு ஏற்பட்ட தீராத பாசம்!

Report Print Vethu Vethu in அரசியல்

காட்டிக் கொடுப்புகளை மேற்கொண்டு தந்தையின் பெயருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்த மாட்டேன் என நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவுக்கும் மீண்டும் பிரதமராக நியமிப்பதற்கு அனைத்து ஆதரவுகளையும் வழங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மத்துகமவில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 26ஆம் திகதியில் இருந்து இதுவரை ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து தீர்மானங்களும் சட்டவிரோதமானவைகளாகும்.

எனினும் அனைத்து சந்தர்ப்பங்களிலும், மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களும் சட்டத்தின் முன்னால் தோல்வியடைந்துள்ளது.

தனக்கு பத்து முறை பிரதமர் பதவி வழங்குவதாக அழைக்கப்பட்டது. சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. எனினும் நாங்கள் இருவரும் ஜனாதிபதியின் கோரிக்கையை நிராகரித்தோம்..

தனக்கு பிரதமராகும் எண்ணம் இல்லை. பிரதமராக ஒரு போதும் எதிர்பார்க்கவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers