அரச துறை செலவுகளுக்கான நிதியை பெற முடியாத கடும் நெருக்கடியில் மைத்திரி!

Report Print Steephen Steephen in அரசியல்

2019ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் நிறைவேற்றப்படாவிட்டால், அரச ஊழியர்களுக்கான சம்பளத்தை வழங்குதல் உட்பட அரச சேவைகளுக்கான செலவுகள் மட்டுமல்லாது ஜனாதிபதிக்கான செலவுகளையும் ஒதுக்க முடியாத நிலைமை உருவாகியுள்ளது.

அரசியலமைப்புச் சட்டத்தின் 148வது சரத்திற்கு அமைய அரச நிதி தொடர்பான சகல அதிகாரங்களும் நாடாளுமன்றத்திற்கு உள்ளது.

அது மட்டுமல்லாது நாடாளுமன்றம் கலைக்கப்படவில்லை என்பதால், திரட்டு நிதியில் இருந்து பணத்தை எடுத்து செலவிடும் அதிகாரமும் ஜனாதிபதி இல்லாமல் போயுள்ளது.

மேலும் அரசியலமைப்புச் சட்டத்தின் 150வது சரத்திற்கு அமைய நிதிக்கு பொறுப்பான அமைச்சரின் கையெழுத்துடன் கூடிய அனுமதிப்பத்திரம் ஒன்றின் மூலமே திரட்டு நிதியில் இருந்து பணத்தை பெற முடியும்.

இதனை விடுத்து அரச திரட்டு நிதியில் இருந்து பணத்தை பெறுவது சட்டவிரோதமானது மட்டுமல்லாது அரசியலமைப்புச் சட்டத்தை மீறுவதாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers