நாட்டு மக்களிற்கு அடுத்து ஆபத்தை ஏற்படுத்தும் மைத்திரி

Report Print Steephen Steephen in அரசியல்

மீண்டும் தேசிய ரீதியான தேர்தல் ஒன்றை நடத்தும் முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமான சூழ்ச்சித் திட்டத்தை முடுன்னெடுத்து நாட்டையும், பொருளாதாரத்தை முற்றாக செயலிழக்க செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது நாட்டு மக்கள் கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.

இவ்வறான சூழ்நிலையில், 19வது திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்து, சர்வாதிகார அதிகாரங்களை திரும்ப பெற்று மோசடியான தேர்தல் மூலம் மீண்டும் அதிகாரத்தை பிடிக்கும் முயற்சியில் ஜனாதிபதி ஈடுபட்டுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக ஜனாதிபதி சட்டத்தரணியும், ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பணிப்பாளருமான ஜே.சி. வெலியமுன தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.

இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தெரிவாக இடமளிப்பது, நீதித்துறையின் சுதந்திரத்தை பறிப்பது, சுயாதீன ஆணைக்குழுக்களை பலவீனப்படுத்துவது, பொலிஸாருக்கு அழுத்தம் கொடுக்க சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொள்வது, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியில் இரண்டு தவணைக்குக்கு மேல் இருப்பது, நாடாளுமன்றத்தை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் கட்டளையின் கீழ் கொண்டுவருவது ஆகிய விடயங்களை முன்னெடுக்கவே 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்யும் முயற்சியில் ஜனாதிபதி ஈடுபட்டுள்ளதாக வெலியமுன குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers