நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது!

Report Print Steephen Steephen in அரசியல்

நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ளதாகவும், அதனை எவரும் மறைக்க முடியாது எனவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் நேற்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நெருக்கடியை ஏற்படுத்தியவர்கள் எவரும் இந்த இழப்பை ஈடு செய்ய மாட்டார்கள் எனவும் சாதாரண மக்களே அதனை ஈடுசெய்ய நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால், பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்து ஸ்திரமான அரசாங்கத்தை ஏற்படுத்த வேண்டியது அனைவரதும் கடமை.

அரசாங்கத்தை அமைத்த பின்னர் தேர்தலுக்கே அல்லது வேறு தீர்வுக்கோ செல்லாம். நாங்கள் அப்பாச்சியை பிரதமராக்கினோம். எமக்கு அமைச்சர் பதவி பறிபோய்விட்டது.

எமக்கு நீதிமன்றத்திற்கும் செல்ல நேரிட்டுள்ளது. நான் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைய மாட்டேன்.

குமார வெல்கமை போல் நானும் சிறந்த சுதந்திரக்கட்சிக்காரன் எனவும் விஜித் விஜயமுனி சொய்சா குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers