சுதந்திரக் கட்சிக்கு புதிய தலைவர் வேண்டும்!

Report Print Steephen Steephen in அரசியல்

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு பதிலாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை கட்சியாக மாற்றிக்கொண்டுள்ளதால், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை கட்டியெழுப்ப புதிய தலைவரை நியமிக்க வேண்டிய காலம் வந்துள்ளதாக அண்மையில் ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்துக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் பியசேன கமகே தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்த முக்கியஸ்தர்கள் பலர், கட்சியில் இருந்து விலகி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்துள்ளதால், தற்போது சுதந்திரக்கட்சிக்கு பதிலாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியாக மாறியுள்ளது.

இதனால், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை கட்டியெழுப்ப தலைவர் பதவியை வேறு ஒருவருக்கு வழங்க வேண்டும். எனக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டால் நான் அதனை செய்வேன்.

எனினும் தற்போது நான் அந்த கட்சியில் இல்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை கட்டியெழுப்ப நான் 49 ஆண்டுகளாக அந்த கட்சிக்காக பாடுபட்டேன் எனவும் பியசேன கமகே குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers