அரச அதிகாரிகளுக்கு ஏற்பட போகும் நிலை!

Report Print Steephen Steephen in அரசியல்

சூழ்ச்சி அரசாங்கத்தின் பிரதான அரச அதிகாரிகள் சிலருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நடவடிக்கை எடுக்க தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், இதற்கான யோசனைகள் அடங்கிய எழுத்து மூலமான ஆவணம் கடந்த வெள்ளிக்கிழமை, சபாநாயகர் மற்றும் நாடாளுமன்ற செயலாளரிடம் கையளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

சூழ்ச்சி அரசாங்கத்தின் பிரதமரின் செயலாளர் அமரசேகர, நிதியமைச்சின் செயலாளர் ஆட்டிகல, பேர்னாட் வசந்த பெரேரா, உபாலி மாரசிங்க, எஸ்.ரி. கொடிக்கார ஆகிய அமைச்சின் செயலாளர்கள் நாடாளுமன்றத்திற்கு அழைக்கப்பட உள்ளனர்.

இந்த அரச அதிகாரிகள் நாடாளுமன்றத்தின் சிறப்புரிமை குழு, நிதிக்குழு, பொதுக்கணக்கு குழு ஆகியவற்றுக்கு அழைத்து விசாரிக்கப்பட உள்ளனர் எனவும் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers