மைத்திரியின் வீடு முற்றுகை! ரணில் தரப்பினரின் திட்டம்

Report Print Rakesh in அரசியல்

கொழும்பில் இந்த வாரம் பல இலட்சம் பேரைக் குவித்து, மாபெரும் பேரணியை மூன்று நாட்களுக்கு நடத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தயாராகி வருகின்றது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்க மறுத்து வரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அழுத்தங்களைக் கொடுப்பதற்கே ஐ.தே.க. இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

ஜனாதிபதியின் வதிவிடம், செயலகம் என்பனவற்றை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது எனக் கூறப்படுகின்றது.

அதேவேளை, எதிர்வரும் 12ஆம் திகதி நாடாளுமன்றம் மீண்டும் கூட்டப்படும்போது, ரணில் விக்ரமசிங்கவை பிரதமராகத் தெரிவு செய்யும் தீர்மானத்தை முன்வைத்து வாக்கெடுப்பு நடத்துவதற்கும் ஐக்கிய தேசியக் கட்சி திட்டமிட்டுள்ளது.

Latest Offers