அபாய எச்சரிக்கை விடுத்திருக்கும் மைத்திரிபால! தவறுக்கு மேல் தவறு

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது 19 ஆம் திருத்தத்தில் கை வைத்துள்ளதுடன், அதனை திருத்தப்போவதாக அபாய அறிவிப்பினையும் விடுத்துள்ளார் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயற்குழுக் கூட்டம், இன்று வடமேல் மாகாணசபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய அவர்,

இதுவரை காலமும் இடம்பெற்ற தவறுகள் அனைத்திற்கும் ஜனாதிபதியே காரணம். அதேபோன்று இன்று தான்தோன்றித் தனமாக ஜனாதிபதி செயற்பட்டு வருகின்றார். இப்பொழுது மீண்டும் ஒரு அபாய எச்சரிக்கையை ஜனாதிபதி விடுத்திருக்கிறார்.

இதுவரை செய்த தவறிலும் அதுதான் பெரிதாக இருக்கும் என்று நினைக்கிறோம். 19 ஆம் திருத்தத்தில் கை வைத்துள்ளதுடன், அதனை திருத்தப்போவதாக அபாய அறிவிப்பினையும் விடுத்துள்ளார். இது பெரும் அதிர்ச்சிக்குறியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers