ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக கொண்டுவரப்படும் பிரேரணைக்கு மக்கள் விடுதலை முன்னணி ஆதரவு வழங்க மாட்டாது என ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார்.
களுத்தறையில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
ஜனநாயகத்தை நிலைநாட்டும் விடயங்களில் மக்கள் விடுதலை முன்னணி ஒத்துழைப்பு வழங்கினாலும் இந்த விடயத்தில் வழங்காது என எதிர்பார்க்கின்றோம்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் தமக்கு 113 பேரை விடவும் கூடுதலானவர்களின் ஆதரவு உள்ளது எனவும், அதனை நிரூபிக்க முடியும் எனவும் குறிப்பிட்டார்.
ஆனால், தமிழ் தேசிய கூட்டமைப்பு ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்குமா இல்லையா என்பது தொடர்பான இறுதி முடிவு நாளை அல்லது நாளை மறுநாள் முடிவு செய்யப்படும் என அக்கட்சி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.