முதன்முறை வரலாற்றில் பதிவான ராஜபக்சவின் அரசாங்கம்!

Report Print Nivetha in அரசியல்

அரசாங்கத்திற்கும், பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவைக்கு எதிராக நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை அண்மையில் பிறப்பித்தது. இது அரசியல் வரலாற்றில் முதன்முறையாக இடம்பெற்ற சம்பவம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் இன்று மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இன்று அரசாங்கம் ஒன்று இல்லை. ஆனாலும் சிலர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்து முன்னர் இருந்த அரசாங்கத்தை அமைக்க முயற்சிக்கின்றனர்.

நாடாளுமன்றத்திலும், நீதிமன்றத்திலும் மற்றும் மக்களின் நீதிமன்றத்திலும் மஹிந்தவின் அரசாங்கம் சட்டவிரோதமானது என நிரூபனமாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, பிரதமர் அலுவலகத்திற்கான நிதி நிறுத்தப்பட்டுள்ள நிலையில், நிதி அமைச்சின் அதிகாரிகள், பிரதமர் அலுவலகத்தின் சில அதிகாரிகள், அமைச்சின் செயலாளர்களாக நியமிக்கப்பட்டோர் நாடாளுமன்ற உத்தரவை மீறி செயற்படுவதாகவும் கூறியுள்ளார்.

மேலும், அவர்களை நடாளுமன்றத்திற்கு அழைத்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பாட்டலி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers