மைத்திரி மீது குற்றவியல் பிரேரணை! ஆதரிக்குமா மகிந்த அணி?

Report Print Jeslin Jeslin in அரசியல்

மைத்திரிபால சிறிசேன பிழையென கூறி அவர் மீதான குற்றவியல் பிரேரணைக்கு நாங்கள் ஆதரவளிக்கமாட்டோம் என மகிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.பி ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் பிரேரணை கொண்டு வரப்படுகின்றதே அதற்கு நீங்கள் ஆதரவளிப்பீர்களா என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

குற்றவியல் பிரேரணைக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை, அதனைப் பெற்றுக்கொள்ள முடியாது.

அத்தோடு தற்புாதுள்ள நிலைமையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பிழையெனக்கூறி நாங்கள் குற்றவியல் பிரேரணையை ஆதரவளிக்கமாட்டோம்.

தனிப்பட்ட கருத்தின்படி நான் ஆதரிக்கமாட்டேன், எங்கள் தரப்பினரும் ஆதரவளிக்க மாட்டார்கள் என நம்புகின்றேன் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...