இறுதித் தீர்ப்பு குறித்து மைத்திரி வெளியிட்ட தகவல்!

Report Print Vethu Vethu in அரசியல்

தற்போது நிலவும் நெருக்கடிக்கு உயர் நீதிமன்றம் முறையான தீர்வொன்றை வழங்கும் என்று எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கான தீர்ப்புக் கிடைக்கும் பட்சத்தில், விரைவாக பொதுத் தேர்தல் ஒன்றுக்குச் செல்வதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு இல்லாதபட்சத்தில் தாம் விரும்பும் பிரதமர் ஒருவரின் கீழ், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை எடுத்துக் காட்டும் நாடாளுமன்ற உறுப்பினருக்கு அரசாங்கத்தை முன்னெடுப்பதற்கு இடம் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

அரசியல் யாப்பின், 19வது திருத்தத்தில் சிறந்த விடயங்கள் இருந்த போதிலும், அதன் சிறப்பற்ற நிலைக்கு ரணில் விக்ரமசிங்க தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொறுப்புக் கூற வேண்டுமென்றும் அவர் கூறினார்.

ரணில் விக்ரமசிங்கவின் உண்மையான சுயரூபத்தை தாம் புரிந்துகொண்டமை அவருக்கு அதிகாரம் கிடைத்த பின்னரே ஆகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஆங்கில இணையத்தளமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் ஜனாதிபதி இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

Latest Offers

loading...