நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ரத்து செய்ய வேண்டும்: பிமல் ரட்நாயக்க

Report Print Kamel Kamel in அரசியல்

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ரத்து செய்வதன் மூலமே இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என ஜே.வி.பி.யின் அரசியல் சபை உறுப்பினர் பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லவில் அமைந்துள்ள ஜே.வி.பி தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசியல் அமைப்பினை மீறி நீதிமன்றத்தை உதாசீனம் செய்து எதேச்சாதிகாரமாக செயற்பட்டு வருகின்றார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையினால் அவர் இவ்வாறு செயற்பட்டு வருகின்றார்.

இருபது ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட்ட மைத்திரி நிறைவேற்று அதிகார ஆசனத்தில் அமர்ந்ததன் பின்னர் முழுமையாக மாறிவிட்டார்.

இதுவரையில் ஜனாதிபதிகளாக நியமிக்கப்பட்ட அனைத்து நபர்களும் இவ்வாறான எதேச்சாதிகார போக்கில் செயற்பட்டு வருகின்றனர்.

தற்பொழுது நிலவி வரும் அரசியல் குழப்ப நிலைமைகளுக்கு தீர்வு காணப்பட்டதன் பின்னர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ரத்து செய்து 20ம் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

Latest Offers

loading...