இலங்கை வரலாற்றில் முதல் முறையாக ஏற்பட்ட மாற்றம்!

Report Print Vethu Vethu in அரசியல்

குற்றவியல் விசாரணை பிரேரணை மூலம் ஜனாதிபதியை பதவியில் இருந்து அகற்ற முடியும் என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

225 நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரும்பினாலும் ரணில் விக்ரமசிங்கவுக்கு பிரதமர் பதவி வழங்க முடியாதென ஜனாதிபதி கூறிகின்றார் என்றால் அது அரசியலமைப்பை மீறும் செயலாகும்.

ஜனாதிபதி அவ்வாறான ஒன்றை கூற முடியாத. ஜனாதிபதி அவ்வாறு கூறுவார் என்றால் 225 உறுப்பினர்களும் ஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் விசாரணை பிரேரணை ஒன்றை கொண்டு வரலாம். அதன் மூலம் ஜனாதிபதியை பதவி நீக்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை வரலாற்றி முதல் முறையாக புதிய அரசியலமைப்பு ஒரு நாளில் 4 முறை மீறப்பட்டுள்ளது.

இது ஒரு தவறான உதாரணமாகும். அது இன்று மட்டுமல்ல எதிர்காலத்திற்கும் பிரச்சினையாகியிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பத்தேகம பிரதேசத்தில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சி கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போத அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers