சபாநாயகருக்கு எதிராக உச்ச நீதிமன்றில் மனு

Report Print Kamel Kamel in அரசியல்

சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு எதிராக உச்ச நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றினால் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் நாடாளுமன்றை கூட்டியதன் மூலம், சபாநாயகர் கரு ஜயசூரிய நீதிமன்றை அவமதித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சட்டத்தரணி அருண லக்சிறி என்பவரினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்றை கலைப்பது தொடர்பில் ஜனாதிபதியினால் பிறப்பிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த இடைக்கால தடையுத்தரவு அமுலில் இருக்கும் போது நாடாளுமன்றை கூட்டி சபாநாயகர் உச்ச நீதிமன்றை அவமரியாதை செய்துள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...