தேர்தல் காலத்தில் பேசப்படும் இனவாதம்! சிங்கள கட்சிக்கு பொறுப்பாக இருப்பது மஸ்தான்?

Report Print Thileepan Thileepan in அரசியல்

சிலர் தேர்தல் காலத்தில் மட்டும் இனவாதத்தை பேசிக்கொண்டு வருவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

நாடாளுமன்றத்தில் இருந்த மூன்று வருடத்தில் சில விடயங்களை செய்ய முடியாது இருந்தது, அதற்காக ஜனாதிபதியோடு தொடர்ச்சியாக நான் பேசி எமது மக்களின் தேவைகள் பற்றி பலமுறை பேசியிருக்கின்றேன்.

அதன் அடிப்படையில் வாக்குவங்கி பாரியளவில் இல்லாவிட்டாலும் சிறு வாக்குகள் மூலம் சுதந்திர கட்சியின் ஊடாக நாடாளுமன்றம் சென்ற எனக்கு உடனடியாக அமைச்சுப்பதவி தரவில்லை.

இருந்தாலும் மக்கள் தொடர்பாக அடிக்கடி பேசிய ஆர்வத்தை பார்த்து அதற்கேற்றவாறு உள்ளூராட்சி தேர்தலில் எனக்கு பாரியளவு வெற்றி ஏற்பட்டது. பூச்சியத்தில் இருந்து 31 உறுப்பினர்களை வெற்றி கொண்டோம். இதன் மூலம் ஒரு பிரதி அமைச்சை ஜனாதிபதி தந்தார்.

எங்களிற்கு அபிவிருத்தியும் தேவை ஆனால் சில அரசியல் கட்சிகள் அதை தாங்கள் மட்டும் உருவாக்கிக்கொண்டு மக்களிற்கு கொடுப்பதில்லை.

இதில் மாற்றம் ஏற்பட வேண்டும். தேர்தல் காலங்களில் கூடுதலாக பேசப்படுவது இனவாதம். இங்கு சிங்கள கட்சிக்கு பொறுப்பாக இருப்பது மஸ்தான், அவர் ஒரு முஸ்லிம் இனத்தவர் என்ற வகையில் பலர் இனவாதத்தை கதைப்பார்கள்.

இவற்றை பார்க்க கூடாது. வேலையை யார் செய்கின்றார்கள் என்று பார்க்க வேண்டும். சிலர் சொல்வார்கள் உரிமைக்காக இருக்கின்றோம் என்று சொல்வதோடு மட்டுமல்லாமல் அபிவிருத்தி என்று போனால், உரிமை கிடைக்காது என்றும் கூறுவார்கள்.

இதை நாம் சொல்லத்தேவையில்லை. சில கட்சியில் உள்ளவர்கள் தங்களிற்குள் முரண்பட்டதோடு வரவு செலவுத்திட்டத்திற்காக பணம் வாங்கி ஆதரித்தோம் என்றும் கூறியிருந்தார்கள்.

எமது மக்களிற்கு கட்டாயம் உரிமை தேவைதான். நாங்கள் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக ஜனாதிபதியிடம் கதைத்திருந்தோம். நல்லாட்சியில் நடக்காத விடயங்களை இந்த ஆட்சியின் ஊடாக செய்வதற்கு முயற்சி எடுத்திருந்தோம்.

ஆனால் பல மாற்றங்கள் பிரச்சினைகள் ஏற்பட்டு நீதிமன்றம் சென்று அமைச்சுக்களை நிறுத்தியமையால் அதை தொடர முடியாமல் போனது.

நாங்கள் உரிமையையும் பெற வேண்டும், அதேவேளை அபிவிருத்தியும் வேண்டும். இரண்டும் ஒரே பாதையில் செல்ல வேண்டும் என்பதே எங்களது நோக்கம்.

இந்த அமைச்சினை ஒன்பது வருடங்களாக வைத்திருந்தவர்களால் மக்களுடைய தேவைகளை ஏன் பூர்த்தி செய்ய முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...