ஜனாதிபதிக்கு மற்றுமொரு சட்டவிரோத ஆலோசனை

Report Print Steephen Steephen in அரசியல்

நாடாளுமன்றத்தை நான்கரை ஆண்டுகளுக்கு முன்னதாக கலைக்கலாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தவறான சட்ட ஆலோசனை வழங்கிய தரப்பினர், அதேபோன்று மற்றுமொரு தவறான சட்ட ஆலோசனையை வழங்கியிருப்பதாக கூறப்படுகின்றது.

நாடாளுமன்றத்தை கலைத்து வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல், அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டால், உடனடியாக பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என இந்த தரப்பினர் ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.

ஜனாதிபதி தேசிய தேவை கருதி சர்வஜன வாக்கெடுப்பை நடத்தினால், அதில் கிடைக்கும் முடிவுகளை கட்டாயமாக அமுல்படுத்தும் சட்டரீதியான கடமைப்பாடு ஜனாதிபதிக்கு உள்ளதாக சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் உயர் நீதிமன்றம் சட்டவிரோதம் என அறிவித்தமை தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவது முட்டாள் தனமானது எனவும் ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ள மக்கள் மத்தியிலான அதிருப்தி இதனால், மேலும் அதிகரிக்கும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எவ்வாறாயினும் ஜனாதிபதி தான் விரும்பியவாறு சர்வஜன வாக்கெடுப்புகளை நடத்த முடியாது. அமைச்சரவையின் அனுமதியும் அதற்கு தேவை என சட்ட வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Latest Offers

loading...