நாமலுக்காக மகிந்த எடுத்த தீர்மானம்

Report Print Steephen Steephen in அரசியல்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஊடாக ராஜபக்ச உறவினர்கள் பலரை நாடாளுமன்றத்திற்கு கொண்டுவர மகிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாமல் ராஜபக்சவை பொதுஜன பெரமுனவின் தலைவராக முன்னிறுத்தவும் அதற்கு தடையாக இருப்பார்கள் என்று சந்தேகிக்கும் தரப்பை அரசியலில் இருந்து ஓரங்கட்டவும் மகிந்த ராஜபக்ச இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு அமைய மாத்தறை மாவட்டத்தில், மகிந்த ராஜபக்சவின் நெருங்கிய உறவினரான மகன் முறையான இளைஞர் ஒருவர் ஏற்கனவே தனது தேர்தல் பணிகளை ஆரம்பித்துள்ளார். இவரது வருகைக்கு மாவட்டத்தில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக பேசப்படுகிறது.

ராஜபக்சவினர் குடும்ப ஆதிக்கம் இல்லாத மாத்தறை மாவட்டத்தில், ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த ஒருவர் அரசியலில் ஈடுபட இருப்பது குறித்து பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Latest Offers

loading...