ஐ.நாவில் இலங்கையின் அங்கத்துவம் தொடர்பில் சிக்கல்

Report Print Steephen Steephen in அரசியல்

ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கையின் அங்கத்துவம், ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை, பொதுநலவாய அமைப்பின் அங்கத்துவம் ஆகியன தொடர்பில் பெரும் சிக்கல் ஏற்பட்டு வருவதாக ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

அதேபோல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இன்னும் 29 நாட்களில் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்க முடியும். இதற்கு அமைய ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

இதற்கு பின்னர் தெரிவாகும் ஜனாதிபதிக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தில் நாடாளுமன்றத்தை ஆதரவு வழங்க ஐக்கிய தேசியக்கட்சி தயாராக இருக்கின்றது.

அத்துடன் ஐக்கிய தேசிய முன்னணிக்கு நாடாளுமன்றத்தில் 113 பெரும்பான்மை பலம் இருப்பதாகவும் அதனை எதிர்வரும் 12 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிரூபிக்க தயாராக இருப்பதாகவும் மரிக்கார் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers